தகவல் சுரங்கத்தில் – பாகம் 1

“Information is wealth” என்று செந்தில் ஒரு படத்தில் சொல்வார். தனக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் தானே திரட்டி வைத்திருந்தால் சுகமாய் வாழலாம் என்று பொருள் பட. சுகபோகியாய் வாழ்ந்தும் இருப்பார் அதில்.நம்மில் பலரும் இதே முன்னைப்புடன் தான் ஓடிக்கொண்டிறிக்கிறோம். ‘என்றோ ஒரு நாள் எல்லா தகவல்களுடன் நிறைந்த செல்வத்துடன் திளைத்திருப்பேன்’ என்ற கனவு. போதாது போதாது என பட்டம் மேல் பட்டம் பெறும் மக்கள் நிறைந்திருக்கும் தேசம்.தொலைக்காட்சி, இணையம், கைபேசி என தொலைதொடர்ப்புக் கருவிகளால் ஒவ்வோர் நொடியும் தகவல் சுரங்கத்தில் இருந்து வாரி இரைக்கப்படும் கோடிக்கணக்கான விவரங்கள். இவற்றை வைத்து நாம் என்னதான் செய்கிறோம்? சரியான தகவல் நமை வந்தடைகிறதா? நித்தம் நாம் எதைத் தான் தேடிக்கொண்டே இருக்கிறோம்?

Info

தேடுதல் – மனிதகுளத்தின் தீரா தாகத்தின் வெளிப்பாடு.கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியர்கள் கூகுளிடம் தேடியது என்ன? சுமார் 800 கோடி பேர் வசிக்கும் இவ்வுலகில் நாம் தேடிய முதன்மையான நபர், சன்னி லியோன் என்கிறான் கூகிள். சன்னி தொடர்பான அனைத்து தகவல்களும் பெரும்பான்மையான இணையவாசிகளுக்கு தெரிந்தே இருக்கிறது. சரி வேறு யாரை நாம் தேடினோம் எனப் பார்த்தல் முதல் பத்து நபர் தேடலில் 8 பேர் சினிமா துறையினர். மோடியும் கலாமுமே வேறு துறையைச் சேந்தவர்கள். சினிமா இல்லை என்றால் நம்மில் பலர் செத்தே போவோம் போல.

சரி, தேடிய நபர்கள் வேண்டாம்; வேறு எந்தப் பொருளை/இடத்தைத் தேடினோம்? Flipkart முதன்மையாய் நிற்கிறது. அதனைத் தொடர்ந்து முதல்ப் பத்தில் 3 பிற online வர்த்தக தளங்கள் உள்ளன. 2 வங்கிகள், IRCTC, Railways, cricbuzz மற்றும் whatsapp. ஆகா 8 தேடல்கள் எதோ ஒன்றை வாங்கும் முனைப்புடன் தேடப்பட்டவையே. இது போக, தொலை தொடர்ப்புக் கருவிகளைத் தேடிக் குமித்திருக்கிறோம். குறிப்பாக செல்பேசிகளை. Strategy analytics யின்  ஆய்வறிக்கை, இந்தியா அமெரிக்காவை முந்திச் சென்று 2017 யில் உலகில் இரண்டாம் மிகப்பெரிய Smartphone சந்தையாகும் என்கிறது. சில ஆண்டுகளுக்கு இரண்டிலக்க வளர்ச்சி(?) பெறப்போகும் ஒரே நாடு இந்தியா தான் என்பது நாம் அறிந்ததே. காரணம் – வளர்ந்து வரும் நடுத்தர ஊதியம் பெரும் குடும்பங்கள். இவர்கள், வாங்குபவை விலையுயர்ந்த பொருட்கள் இல்லை. மலிவான, தள்ளுபடி என விற்க்கப்படும் பொருட்களே. பரபரப்பாய் விற்கும் எந்த செல்பேசியும் 6000 முதல் 20,000 வரை மட்டுமே விற்கின்றன. பெரும்பாலும் 3.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையே கார்கள் விற்கின்றன. வாங்குகிறோம், அதிகமாய் வாங்குகிறோம், தள்ளுபடி என்றால் வாங்குகிறோம்; ஆனால் தரமான பொருட்களை வாங்குவதில்லை(விளக்கம்- பாகம் 2ல்). ஆக செந்தில் கூறுவது போல் எந்த இடங்களில் இன்று தள்ளுபடி, எங்கு இலவசம் கொடுக்கிறார்கள்,  எங்கு கடைதிறப்பில்/மொத்தமாய் மோதும்போது  1 வாங்கினால் இன்னொன்று இலவசம், 250 ரூபாய்க்கு செல்பேசி வாங்குவது எப்படி, சத்யம் திரையில் படம் பார்க்க என்ன செய்ய வேண்டும், IRCTC யில் பயணச் சீட்டு எடுப்பது எப்படி என இணைய வாசிகள் நுகர்வோர்களாய் மட்டுமே இருக்கின்றனர். இவர்கள் நுகர்வுப் பழக்கத்தை இன்னும் ஆழமாக்க, எல்லா  இணைய தளங்களும் விளம்பரங்களை அள்ளித் தெளிக்கின்றன.செய்தித்தாள்களும் மொபைல் appகளும் தொலைக்காட்சியும் இதற்கு விதிவிலக்கு இல்லை. ஆகா, செய்தியோ தகவலோ விளம்பரம் இல்லாமல் நம்மிடம் வந்து சேர வாய்ப்பே இல்லை. நாம் செய்தியைப் பார்கிறோமோ இல்லையோ விளம்பரத்தைப் பார்த்து, நுகர்ந்து கொண்டே இருக்கிறோம். நுகர்தல் ஒரு தேசிய போதையாகிப் போனது.

நுகர்வைத் தொடர்ந்து இந்திய தகவல் பரிமாற்றத்தில் அடுத்த வரிசையில் இருப்பது கேளிக்கை. இதற்கு அளவே இல்லை. ஒரு நாளில் கேளிக்கைக்கு ஒரு சராசரி இளைஞன் 3 மணி நேரமாவது செலவிடுகிறான். எதுவும் கேளிக்கை எல்லாம் கேளிக்கை. இந்திய சமுகம் இன்னும் இளமையாய் இருப்பதினால், இந்த மனப்பாங்கு வழக்கமானதே. ஆனால் இங்கே முன்னெப்போதும் இல்லாத இளமை நிலவுவதால் கேளிக்கை மக்களின் கண்ணை மறைக்கிறது. அரசியலை/அரசியல்வாதிகளை கேளி செய்யலாம் தான். ஆனால் இன்றைய சூழலில் கேளி மட்டுமே செய்கிறோம், அதைத் தாண்டி நம்மில் பலரால் அரசியலைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. சமுக ஊடகங்களுக்கு அரசியலை இளைஞர்களிடம் அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு உண்டு, அதில் மாற்றுக் கருத்தில்லை. என்றாலும், அரசியலின் முதல்ப் படியிலேயே அவர்களை 10 வருடங்களாக வைத்திருப்பதிலும், ஊடகங்களுக்குப்  பங்குண்டு.

எல்லா நிகழ்விற்கும் இன்று memes தான். மழை வெள்ளமா, சுனாமியா, புகம்பமா எதையும் விட்டு வைப்பதில்லை நாம்.சமுக வலை தளங்களில் வருவதைத் தான் இன்று பத்திரிக்கை, தொலைகாட்சி என எல்ல ஊடகங்களும் வெளியிடுகின்றன. மக்களை குதுகலத்தில் வைப்பது மட்டுமே இவர்களது கடமையைக் கருதுக்கின்றனர்.இதன் அடிப்படையில் பல சமயங்களில் செய்திகள் மற்றும் தகவல்களை ‘உருவாக்குகின்றனர்’. ஊடக அறம் என்பதை எல்லாம் கடந்து வந்து வருடங்கள் பல ஆகின்றன.மக்களிடம் உள்ள தொலைத்தொடர்ப்புச் சாதனங்களைக் கணக்கில் கொண்டு ஊடகங்கள் 24 மணி நேரமும் வேலைபார்க்கின்றன. சாதனங்கள் பெருகப் பெருக செய்திகளும் கேளிக்கைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

ஒரு சமூகம் என்று கேளிக்கையின் வழியாக மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்யுமாயின், அது வளர்ச்சியடையாத பக்குவமற்ற சமூகமே. இதே பக்குவமின்மை எல்லா ஊடகத்திலும் பிரதிபலிக்கக் காணலாம். இன்றைய இளைய தலைமுறை மக்கள் தொகையில் பெரும் பகுதியாய் உள்ள .காரணத்தினால் தான், இந்த பக்குவமற்ற நிலை ஆயின்; இன்னும் 20 வருடம் இதுவே நிலை.

இந்தியா இளமை மிடுக்கில் துள்ளுகின்றதோ?…..தொடரும் பாகம் 2யில்.

Leave a comment