Category Archives: இந்தியா

தொடரும் ‘தேசிய மொழி’ விவாதம்

இந்தி திணிப்பு, தேசிய மொழி, ஒற்றை மொழி கொள்கை  எனப் பல மாநிலங்களில் மொழி சார்ந்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் மொழி ரீதியான ஒடுக்கு முறைகள் திணிக்கப்படும் போது, இவ்விவாதங்களின் வீரியம் வழுக்கும். ஆனால் முற்றாய்  தீர்வு வந்த பாடில்லை. இந்தப் பதிவு ‘தமிழ் மட்டுமே செம்மொழி’, ‘எம்மொழி போன்று வேறில்லை’; என்று மார்தட்டி மற்ற மொழி தூற்றும் முயற்சி அல்ல. அன்றி, தாய்மொழி என்பதின்  முக்கியத்துவம் மற்றும் கூட்டாச்சியில் மொழிகளின் நிலை  போன்றவற்றைக் குறித்தே. தமிழ் ஒரு உதாரணமாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது .

hindiதமிழ்நாட்டைப்  பொறுத்த வரை தமிழ் அல்லாத எந்த மொழியும் தேசிய மொழி என்ற அடையாளத்தைப் பெற வாய்ப்பில்லை. எனினும் தாய் மொழியே முதலானது என்ற தமிழர்களின் கருத்து தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப் பட்டும், கேளிக்குள்ளாக்கப் பட்டும் விவாதங்கள் குற்றச்சாட்டாக முன் வைக்கப்படுகிறது.

தமிழர்களும், இந்தி எதிர்ப்பை தீர்க்கமாக முன் வைக்கும் பிற மாநிலத்தவரும் ஏன் ‘தேசிய மொழி தேவை’  என்ற சித்தாந்தத்தை ஏற்க மறுக்கின்றன?

இந்தியா தேசங்களின் தேசம். இதை ஒற்றை தேசமாகச் சித்தரிக்கும் முனைப்பு தேசிய கட்சிகளிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. நோக்கம் பலவாறாக இருந்து வந்திருக்கிறது. பொதுக்கருத்து எனப் பார்த்தால் ‘நாம் ஒற்றை தேசமாகி விட்டோம், இனி மாநிலங்களுக்கிடையே ஆனா தொடர்புகள் ஒரு ஒற்றை மொழியிலேயே இருத்தல் அவசியம். இந்தி பெரும்பாலான மாநிலத்தவர் பேசுகிறார்கள் அதனால் அதையே ஒற்றை மொழியாக வைத்துக்கொண்டால் செயல் திட்டம் எளிதாகி விடும்’, என்பதே.

ஆனால் அடிப்படைச் சிக்கல் 6-8 மாநிலங்கள் மட்டுமே இந்தி பேசிகிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் பெருகி இருக்கலாம். ஆனால் மற்ற மொழிகளின் செழுமையும், வகைமையும், அம்மொழிகளைப் பேசுகிறவர் எண்ணிக்கையும் அதிகமாவே இருக்கின்றன. ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு, மொழி எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்து, பின்னர் 15 ஆண்டு கழித்து இந்தி ஆட்சி மொழி ஆகலாம் என்ற கொள்கையை காங்கிரஸ் அரசு கைவிட்டு, வெறும் சில மாநிலங்களால்  மட்டுமே  இப்போராட்டத்தில் கைகொடுகப்ப் பட்டு தமிழ்நாடு ஒரு வெற்றிக் களைப்பில் தனிமைப் படுத்தப் பட்டது. தூசி வாரி சபித்தவர் பலர். இத்தனை கோபங்களுக்கு இடையிலும் நாம் செய்த போராட்டம் வெறும் மொழிக்காக மட்டும் இல்லை; நம் வேர்களுக்கே.

சரி, பொதுத் சிந்தனை என்பது திணிக்கப் பட்டதே. அரசியல் லாபங்களுக்குகாக புத்திசாலிகளால் மக்களின் மனத்தில் ஆழமாய்ப் பதிய வைக்கப்படும் எளிமையான கருத்துக்களே. இவற்றை ஏன் இவ்வாறு கொண்டு சென்று மக்களிடம் சேர்க்க வேண்டும்? லீக் வான் யூ  ஒரு முறை இந்தியா வந்திருந்த போது  அவரிடம் ஒரு IAS அதிகாரி கேட்ட கேள்வி – “இன்று உங்களிடம் இந்தியாவைக் கொடுத்தால் சிங்கப்பூர் போன்று அதை உங்களால் மாற்ற முடியுமா?’. லீக் வான் யூ ஒரு நேர்மையான புத்திசாலி. அவருடை பதில் மிகத் தெளிவாக இருந்தது – “இந்தியா பலமுகம் கொண்ட நாடு. தனி மனிதர் ஒருவரால் இந்தியாவை மாற்றிவிட முடியாது. பஞ்சாபி பேசும் ஒரு பிரதமரை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள முடியாது. சீனாவில் 90% ஒரே மொழி பேசுவோர் இருப்பதனால் அது சாத்தியப்படலாம். இந்தியா தன வரையறைகளை மீறவே முடியாது. இது வெள்ளையரின் கடுமானத்தில் உருவான நாடு; இந்த சவால்களுடன் தான் நாம் இதை அணுக வேண்டும்” என்றவர் மேலும் கேள்விக்கான பதிலில், “நாங்கள் சிங்கப்பூரை அனைவரும் சமாகப் போட்டியிடும் ஒரு களமாகத் தொடங்கினோம், ஆங்கிலத்தை பொது மொழியைத் தேர்ந்தெடுத்தது…யாருக்கும் அது சாதமாக இல்லை.”

இவ்வாறு ஒரு நாடு(country) உருவாகும் பொழுது, பலதரப்பினரும் சேர்ந்து வாழும் சூழல் நேருமாயின்; யாருக்கும்  சாதகமற்ற ஒரு சமமான இயங்கு தளத்தை அமைத்தல் அவசியம். இந்தியாவை நிர்மாணித்த நேருவின் கீழான ஆட்சி இதையே செய்தது.லீக் வான் யூவே ஏற்க மறுக்கும்  – அனைவருக்கும் ஓட்டுரிமை, என்பதை எடுத்த எடுப்பில் இந்தியா நிறைவேற்றியது என்பதே அதற்கு சாட்சி. இந்தியா ஒரு கூட்டமைப்பாகவே இருக்க, இந்த அரசியில் அமைப்பு பல வசதிகளைச் செய்துள்ளது. அவ்வசதிகளாலேயே நாம் இன்று பல தளங்களில் உரக்க கேள்விகளைக் கேட்க முடிகிறது.இவையின்றி, சாதி மத இனப் பூசல்கள் உள்ள இந்த நாட்டில் வாய்திறக்க quota வைத்திருப்பார் சிலர்.

ஹிந்தியைத் தூக்கிப் பிடிக்கும் பலர் ஐரோப்பிய நாடுகள் செல்லும் போது ஆங்கிலம் கூட மறந்து அந்நாடுகளின் மொழிகளை குறை சொல்லாமல் ஏற்றுக் கொள்கின்றனர். பல சமயங்களில் வேலை நிமித்தமாய் அம்மொழிகளைக் கற்றுக்கொள்ளக் கூடத் தயங்குவதில்லை. ஆனால் சென்னைக்கு பிழைப்புத் தேடி வரும் இதே வகையைச் சேர்ந்த பலர் ஆட்டோ ஓட்டுனருக்குக் கூட ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என எதிர் பார்ப்பது – ஒரு மொழியின் அதிகாரத்தையே காட்டுகிறது(கொழுப்பையும் கூடத் தான்).

ஒரு மொழி வளர முக்கியக் காரணிகள் அதன் பொருளாதாரம் மற்றும் அதிகாரம். ஜெர்மன், ஜாப்பனீஸ், இத்தாலியன், பிரெஞ்சு, ஆங்கிலம் எனப் பல உதாரணங்களில் அம்மொழிகளைப் பேசும் கூட்டம் பொருளாதாரத்திலோ அதிகாரத்திலோ தொடர்ந்து தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டுள்ளது. ஹிந்திக்கும் இது பொருந்தும். ஹிந்தி பேசும் இந்த ஆறு மாநிலத்தவர் இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை நிரப்புகின்றனர். அதிகாரம் அவர்கள் கையில் உள்ளது. ஆனால் ஹிந்தியை திணிப்பதில் அவர்கள் தோற்பது இதே இடங்களை நிரப்புப்பும் பரபரப்பில் தான். மற்ற மொழி பேசும் மாநிலங்களும் இதற்கு ஈடான இடங்களை பெற்றுள்ளன.ஐரோப்பிய நாடுகளில், அம்மொழிகள் அந்நாட்டவரின் ‘தேசிய’ மொழிகள் என்று வாதிட்டு, ‘அதனால் அதை ஏற்கிறோம்’ என்றால் ; இந்தியா தேசமா(nation) இல்லை நாடா(country) என்பது தெரிந்திருக்க வேண்டும். இந்தியா ஒரு நாடு (country), தேசம் (nation) அல்ல. தமிழ்நாடு ஒரு தேசம், கேரளம் ஒரு தேசம், ஆந்திரம் ஒரு தேசம், மாராட்டா ஒரு தேசம். இவைகள் அடங்கிய ஒரு கூட்டமைப்பு(union) தான் இந்தியா. இவற்றை அங்கீகரித்தே 22 ஆடசி மொழிகள் இங்கு உள்ளன. பாராளுமன்றத்தில் தமிழில் பேச முடியும் என்றால், அவைக் குறிப்பில் பேசியது இடம்பெறும் என்றால்; சென்னை சென்ட்ரலிலும் தமிழில் பேச முழு உரிமை உள்ளது.

மேலும் ஒரு முக்கியமான காரணி – பொருளாதாரம். இந்த ஆறு மாநிலங்கள் மகாராஷ்டிரா,கேரளா, ஆந்திரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன.இவை தொழில் வளம் பெற்று முன்னுக்கு வரும் பட்சத்தில், ஹிந்தி திணிப்பு மேலும் மூர்க்கமாக இருக்கும்.

விவாதம் 2ஆம் பகுதியில் தொடரும்..

வாழ்க்கைத் தரம் – 1

இந்தியா ஒரு சிக்கலான கூட்டமைப்பு. இச்சமுகத்தில் என்றுமே மக்களின் வாழ்க்கை தரம் சமமாக உயரவோ தாழ்ந்ததோ இல்லை. விவசாய சமுகமாய் இருந்து இன்று சந்தைப்  பொருளாதாரச் சமுகமாய் உருமாறி உலகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாடு, தன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை  எப்படி வைத்திருக்கிறது?

வாழ்க்கைத் தரம் – உலகம் முழுவதிலும் இன்றும் இது சமமற்றே இருக்கிறது. நாடுகளுக்கிடையே இந்த வளர்ச்சியை Hans Rosling குறிப்பிடும் பொழுது தன் முந்தைய தலைமுறைக்கு கிடைக்காத ஒரு பொருள் இந்தத் தலைமுறைக்கு கிடைத்தால் அதுவே முக்கியமான வளர்ச்சிக் கூறு. மேலும் இந்தத் தரம், குழந்தை இறப்பு விகிதம் குறையும் பொது பெரிதாய் வளர்ச்சி அடிக்கிறது என்கிறார். இவ்விகிதம் பெண்கள் கருவுறும் விகிதத்தையும் நேரடியாய்ப் பாதிக்கும். இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் – உலக வங்கியின் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு 1000 குழந்தைக்கும் 48 குழந்தைகள் 5 வயதிற்குள் இறக்கின்றன. இது தனியே பார்த்தால் ஆப்ரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் அளவில் இருக்கிறது (ஆப்ரிக்க நாடுகள் இந்தக் குறியீட்டில் அசுர வளர்ச்சியடைந்திருக்கிறது). ஆனால் நாம் வெகுவாக வளந்திருக்கிறோம். இந்த வளர்ச்சியின் விளைவாய், பெண்கள் கருவுறும் விகிதமும் குறைந்து 2.5ய் உள்ளது.
SoL - Copy

இந்தியாவின் மக்கள் தொகை மேற்கூறிய இவ்விரண்டு கூறுகளால் எளிதில் புரிந்துகொள்ள  முடியும். நம்முடைய மக்கள் தொகையை சுமையாக பார்த்த காலம் மலையரிப்போய், இன்று இளமை ததும்பும் ஒரு நாட்டை, உலக அரங்கில் பெரும் சந்தையாகவும், ஒரு வேலைச் சமுகமாகவும் மாற்றி இருக்கிறது. இந்த மாற்றம் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் பாதிக்கும். ‘பாதிக்கும்’ என்றால் பாதகமாகவும் மாறலாம்.

Maslow’s hierarchy of needs என்பது ஆபிரகாம் மாஸ்லோ என்ற அமெரிக்கரின் தேவை மற்றும் முன்னேற்றத்திற்கான கோட்பாடு. மனிதம் குறித்தான முக்கியமான கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. ஒரு சமுகத்தின் வாழ்வாதாரம், முன்னேற்றம் மற்றும் உக்கதிர்க்கும் கூட இந்த பிரமிட்-ஐ உபயோகிக்கலாம்.

மாஸ்லோ இந்த pyramidஐ வடவைமைத்ததன் நோக்கம் வேறு; ஆனாலும் நாம் இதை ஒரு தனி மனித மற்றும் சமுகத்தின் முன்னேற்றம் என்ற ஒரு பரிணாம வளர்ச்சியை ஆராயப் பயன்படுத்தலாம்.

இந்தியாவைக் கீழிருந்து அலசலாம். அடிப்படைத் தேவைகள் நிறவெறியிருக்கிறதா?
உணவுத் தட்டுப்பாடு பசுமைப் புரட்சியில் தீர்ந்தது என்று வாதிடும் அதே நேரத்தில் இந்தியாவில் விவசாயத் தற்கொலைகள் நடந்ததிற்கு கரணம் என்ன என்ற கேள்வியையும் வைத்தே ஆகா வேண்டும். இவை இரண்டும் தொடர்புடையைவையே. இந்தத் தொடர்ச்சியை அரசாங்கங்களும் நிறுவனங்களும் மறுத்தே வரும், அது நேரான விளைவே.  நிலவுடைமை, நிலத்தின் மீதான வரி மற்றும் மோசமான நீர் மேலாண்மை போன்ற ஆங்கிலேய காலத்து காரணிகளைத் தாண்டி விவசாயக் கடன், பூச்சிக்கொல்லிகள் மற்றும் முறையற்ற சந்தை என  புதிய காரணிகளின் அடிமை ஆகிப் போன நம் விவசாயச் சமுகத்தினரே இந்த கடைசித் தளத்தில் முதன்மையானவர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் குறு விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலார்கள். இவர்களது நகர்ப்புறத்து வடிவமாய் எளிய வேளைகளில் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் நகரத்திற்கு வசிக்கும்/புலன்பெயர்ந்த தொழிலாளர்கள். ஆதிவாசிகள், பழங்குடியினரும் இந்தத் தளத்தில் வருவர்.

இவர்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர், கழிவறை, ஆரம்ப சுகாதாரம், வீடு போன்றவை கிடைத்து விடாதா என்றால் இல்லை. பொது விநியோகத் திட்டத்தில் இருக்கும் அலட்சியப் போக்கு, உணவு விரையம் மற்றும் பாதுகாப்பான உணவுக்கிடங்குகள் இல்லாமை போன்றவை Global hunger indexயில் இந்தியாவை  முதல் 25 இடங்களில் வைத்துள்ளது.(India(2015) – GHI – 29). India’s Warehousing Development and Regulatory Authorityயின் தகவல் – இந்தியா 13% GDPயை உணவை பாதுகாப்பான கூடங்களில் வைக்க முடியாதலால் விரயம் செய்கிறோம் என்கிறது. WHO இந்தியாவின் ஒழுங்கற்ற பொது விநியோகத்தை ‘ஆபத்தானது’ என்கிறது. பசுமைப் புரட்சியில் அடைந்ததைக் கருதும் அனைத்தையும் நாம் பல வழிகளில் இழந்து மக்களைப் பட்டினியாய் வைத்திருக்கிறோம்.

1024px-Maslow's_Hierarchy_of_Needs.svg

மாஸ்லோ இந்த pyramidஐ வடவைமைத்ததன் நோக்கம் வேறு; ஆனாலும் நாம் இதை ஒரு தனி மனித முநேர்த்ரம் மற்றும் சமுகத்தின் முன்னேற்றம் என்ற ஒரு பரிணாம வளர்ச்சியை ஆராயப் பயன்படுத்தலாம்.

இந்தியாவைக் கீழிருந்து அலசலாம். அடிப்படைத் தேவைகள் நிறவெறியிருக்கிறதா?
உணவுத் தட்டுப்பாடு பசுமைப் புரட்சியில் தீர்ந்தது என்று வாதிடும் அதே நேரத்தில் இந்தியாவில் விவசாயத் தற்கொலைகள் நடந்ததிற்கு கரணம் என்ன என்ற கேள்வியையும் வைத்தே ஆகா வேண்டும். இவை இரண்டும் தொடர்புடையைவையே. இந்தத் தொடர்ச்சியை அரசாங்கங்களும் நிறுவனங்களும் மறுத்தே வரும், அது நேரான விளைவே.  நிலவுடைமை, நிலத்தின் மீதான வரி மற்றும் மோசமான நீர் மேலாண்மை போன்ற ஆங்கிலேய காலத்து காரணிகளைத் தாண்டி விவசாயக் கடன், பூச்சிக்கொல்லிகள் மற்றும் முறையற்ற சந்தை என  புதிய காரணிகளின் அடிமை ஆகிப் போன நம் விவசாயச் சமுகத்தினரே இந்த கடைசித் தளத்தில் முதன்மையானவர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் குறு விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலார்கள். இவர்களது நகர்ப்புறத்து வடிவமாய் எளிய வேளைகளில் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் நகரத்திற்கு வசிக்கும்/புலன்பெயர்ந்த தொழிலாளர்கள். ஆதிவாசிகள், பழங்குடியினரும் இந்தத் தளத்தில் வருவர்.

இவர்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர், கழிவறை, ஆரம்ப சுகாதாரம், வீடு போன்றவை கிடைத்து விடாதா என்றால்…..இல்லை.

பொது விநியோகத் திட்டத்தில் இருக்கும் அலட்சியப் போக்கு, உணவு விரையம் மற்றும் பாதுகாப்பான உணவுக்கிடங்குகள் இல்லாமை போன்றவை Global hunger indexயில் இந்தியாவை  முதல் 25 இடங்களில் வைத்துள்ளது.(India(2015) – GHI – 29). India’s Warehousing Development and Regulatory Authorityயின் தகவல் – இந்தியா 13% GDPக்கு நிகரான  உணவைப் பாதுகாப்பாக கூடங்களில் வைக்க முடியாதலால் விரயம் செய்கிறோம் என்கிறது. WHO இந்தியாவின் ஒழுங்கற்ற பொது விநியோகத்தை ‘ஆபத்தானது’ என்கிறது. பசுமைப் புரட்சியில் அடைந்ததாதைக் கருதும் அனைத்தையும் நாம் பல வழிகளில் இழந்து, மக்களைப் பட்டினியாய் வைத்திருக்கிறோம்.

தண்ணீர் அரசியல் உலகத்தில் தொடங்கி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்திய மக்கள் அதற்கு விதிவிலக்கல்ல. பொதுப்புத்தியில் குளாய்த் தண்ணீர் அசுத்தமானது என்ற பிரச்சாரத்தில் ஆரம்பித்து தோண்டத் தோண்ட உப்பு நீர் மட்டுமே சுரந்து கொண்டிருப்பது வரைப் பார்த்தாகிவிட்டது. போது சுகாதாரத்திற்குக் கூட தண்ணீர் இல்லாத பல மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. நகரங்களில் கீழ்த்தட்டு மக்களும் பாட்டில் நீரையே அன்றாடம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தக் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். அரசு நீர் மேலாண்மையில் தோல்வியடைந்தது மட்டுமன்றி நீர் அரசியலில் கேட்டிக்காரத்தனமாய் மௌனம் மட்டுமே காட்டுகின்றது. நீரை அறுவடை செய்வதில் சிறு முதல் மாபெரும் முதலை முதலாளிகள் வரை போட்டி. அது நீரின் தரம் மற்றும் அளவைப் பொறுத்து சிறு சண்டையில் இருந்து பெரும் அரசியல் போராய் நடந்து கொண்டே உள்ளது. சாமானியன் வீட்டில் நீர் என்பது – ஆடம்பரமாய் மாறும் நிலை வெகு தொலைவில் இல்லை.

சில முக்கியத் தகவல்கள் –

1 நபர் 1 நாள் தண்ணீர் வபயோகம் இந்தியாவில்(சராசரி) – 52 லிட்டர்
பாசனத்திற்கு நாம் பயன்படுத்தும் நீரின் சதவீதம் (மொத்தமாய்க் கிடைக்கும் நீரில்) – 80% – உலகில் முதல் இடம்
இந்தியாவில் நீரால் ஏற்ப்படும் நோயின் சதவீதம் – 21%
வறுமைக்கோட்டிற்குக் கீழே சுத்தமான நீரின்றி இருப்போர் – 52%
CPCBயின் அனுமானத்தில் மாசுபடிந்த நிலத்தடி நீரின் அளவு – 75-80%
வயிற்றுப்போக்கில் ஆண்டுதோறும் இறக்கும் குழந்தைகள் – 3,15,000

இதனினும் கொடுமையான தகவல்கள் உள்ளன; அவை இந்தியாவை ஆப்பிரிக்காவின் சின்ன ஏழை நாடுகளுடன் ஒப்பிட்டு அதனிலும் கீழே வைக்கின்றது. நம் தண்ணீர் போராட்டம் மறைமுகமாக தினசரி நடந்து கொண்டே இருக்கிறது; ஒரு நாள் நம் கண்முன் வரும் போது – ‘தண்ணீர்’ என்று சொல்லக்கூட எச்சிலற்று இருப்போம்!

நம் வாழ்க்கைத் தரத்தைக் கிழித்துத் தொங்கப்போட மேலும் நிறைய உள்ளது….தொடரும் இரண்டாம் பாகத்தில்…!