நானும் சாமியாரும்

சுவாமி சரவண-பபா

ஆமா இப்டி ஒரு சுவாமி இருக்கார்.
போன வருடம் கார்த்திகைக்கு நண்பர்கள் அழைத்தார்களென Zurich-Adiswil லிலுள்ள முருகன் கோவிலுக்குப் போனேன். Cultural anthropology பிடிக்குமாதலால் எல்லா வழிபாட்டுத்தழங்களும் அல்வா துண்டுகளே.

இவ்வளவு தமிழ்க் குடும்பங்கள் இங்கே உள்ளனர் என்றும், இங்குள்ள ஹிந்து அமைப்புகளிடையே வலுவான Nexus இருப்பதும் அங்கிருப்பவர்களைப் பார்த்ததும் புரிந்தது.

கோவிலுக்குள் பூஜை தொடங்குமுன்னர் எல்லோரும் நின்று பேசிக் கொண்டிருந்தோம். திடீரென சலசலப்பு ‘சாமி வர்றார், வர்றார்’ என. அனைவரும் ஒதங்கி ஓரமாய் நிற்க, இந்தியாவில் இருந்து வரவைக்கப்பட்ட சில பெரிய parcelகள் உள்ளே எடுத்துவரப் பட்டது. இன்னும் சில உள்ளன எடுத்துவர உதவுமாறு கேட்டார் ஒரு பக்தர். ‘எங்கிட்டயேவா?!’ என நினைத்துக் கொண்டு , வடிவேலு ஒரு படத்தில் ‘தள்ளு தள்ளு தள்ளு’ ன்னு பஸ்ஸைத் தள்ளுவது போல பாவளா காட்டி எல்லா parcelலும் இறக்கி வைக்கப்பட்டன.

சிறிது நேரத்தில் சாமியார் உள்ளே வந்தார். தாடி வைத்து, ஜடா முடியுடன், பல ருத்ராய்ச்ச மாலைகளுடன், பயங்கர serious முகத்துடன் வருவார் என கற்பனை செய்து வைத்திருந்தால் – வந்ததோ clean shaven (both face and head), அம்சமான ஒரே ஒரு ருத்ராச்சத்துடன், புன்னகை பூத்த முகத்துடன், பட்டுச் சேலையை நான்காய் மடித்து துப்பட்டாவாய் போட்டுக் கொண்டு கையில் மயிலிறகுடன் ஓர் ஆசாமி.

நான் சுதாரிப்பதற்குள் சாமியார் தன் ஆசனத்தில் அமர(கோவிலில் chair போட்டு உட்காரலாமானு தெரிந்தவர்கள் சொல்லவும்) என்னையும் கூட்டத்தில் அமர வைத்தனர்.

கூட்டம் தொடங்க, ஒருவர் மாற்றி ஒருவராக சாமியாரைப் புகழ்ந்து தள்ளினர்.ஒருவர் ‘இவர் முருகனின் அவதாரம்’ என்றார். அதைக் கேட்டுத் தானாய் சிரித்தபடி, மயிலிறகுடன் விளையாடிக் கொண்டிருந்தார். உண்மையில் அனைவர் பேசும் போதும் விளையாடிக் கொண்டே தான் இருந்தார் அந்த அவதாரம்(அதான் பால முருகன்னு சொல்லியாச்சே -justification to the role).

தீடீரென சாமியார் எழுந்து கூட்டத்தினூடே நடக்கத் தொடங்கினார். மணி இரவு 8 ஆகி இருந்த வேலையில், கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த போது, யாரோ தலையில் தடவுவது போல் இருக்க; திரும்பிப் பார்த்தால் சாமியார் எல்லார் மேலும் மயிலிறகால் வருடியபடி செல்கிறார்.

பின்னர் அனைவரும், வாய் ஓய்ந்திருக்க; ஆரம்பமானது சாமியாரின் அருளுரை. நான் எல்லா மதத் தலைவர்கள்/அடிப்படைவாதிகளின் உரையையும் கேட்பதுண்டு. நாம் அறியாத பல தகவல்களை எளிய மொழியில் புரிய வைத்துவிடுவர் சிலர். எனவே, ஆழ கவனிக்கத் துவங்கினேன். இறைவனை வணங்கி foreplay முடித்து matter லுக்குள் நுழையுத்தார் சாமி, நான் ஐந்தே நிமிடத்தில்  வெளியேறி விடலாம் என எழுந்தேன்; நண்பர்கள் அமுக்கி உட்கார வைத்தனர். ஒரு சாமியாருக்கு stuff இருக்குதான்னு பார்க்க 5 நிமிடம் போதுமானது. ஜக்கி ஒரு classic example. ஜக்கி போன்று திறமையாகத் தன் தாய் மொழி அல்லாத மொழியில் ஒருவர் அழகாய்ப் பேசுவது மிகக் கடினம். ஜக்கி அதில் வல்லவர், போக அவருடைய பல்துறை ஆழமான அறிவு சமயத்தில் வியக்க வைக்கும். ஆனால் இந்த ஆசாமியோ அருளுரை என்ற பெயரில் தரும் கொடுமையான உபதேசங்கள், மிகுதியாய்க் கடுப்படித்தன.

எழுந்து ஓடவும் முடியாமல் இருபுறமும் நண்பர்கள். கோவில் வாசலும் பூட்டப்பட்டு இருந்தது. புதைகுழியில் விழுந்தால், துள்ளாமல் அமைதியாய் இருந்து பின்னர் மேல் உடம்பை மட்டும் குனிந்து நகர்ந்து தப்ப வேண்டும் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. கையில் செல்பேசியை எடுத்து sudoku ஆட ஆரம்பித்தேன். சிறிது விளையாட்டு, சிறிது சாமியாரின் மொக்கை என 2 மணி நேரம் கடந்தது.

அடுத்து விளக்கு பூஜை. ஒரு paper தட்டு, மண் விளக்கு, ஒரு திரி எல்லோருக்கும் வழங்கப்பட்டது. பெரிய 2 liter பாட்டிலில் எண்ணெய் எடுத்து வந்து ஒவ்வொரு விளக்காய் ஊற்றினார் ஒரு பக்தர். விளக்குகள் ஏற்றப் பட்ட பின்னர், மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. மயான அமைதி, விளக்கெண்ணெய் வாசம், சுவரில் ஆடிக் கொண்டே தெரிந்த கருநிழல்கள். பாட ஆரம்பித்தார் சாமியார். பக்தர்களும் நானும் பாட்டை உற்று கவனித்தோம். சுதியைக் கூட்டினார்; கூடம் அதிர்ந்தது. அங்க வந்திருந்த ஐரோப்பியர்களில் ஒருவர் கண்ணில் கண்ணீர்! பக்தர்கள் மெய் மறந்தனர். நான் அனைத்தையும் அசை போட்டு யோசித்துக் கொண்டிருந்தேன். பாடல்கள் முடிந்தன. அடுத்து ஸ்லோகங்கள் சாமியார் சொல்ல, மற்றவர் சொல்லத் துவங்கினர். நேரம் ஆகிக் கொண்டே  இருந்தது. எவரும் கோவிலில் இருந்து வெளியேற முயலவில்லை. சிறு குழந்தைகளும் அடக்கி வைக்கப் பட்டனர். விளக்கு பூஜை முடிந்து மின்விளக்குகள் மீண்டும் போடப் பட்டன. சாமியார் எங்களை எழச் சொன்னார். மயக்கத்தில் இருந்து தெளிய முடியாமல் சில கால்கள், நெளிந்து எழுந்து நின்றன. விளக்கை மீண்டும் ஒரு இடத்தில் surrender செய்தோம்.

பிறகு, பெரிய சத்தத்துடன் வந்து ஸ்லோகத்தை திரும்பாத திரும்பச் சொன்னோம். சாமியாரே கலைப்பாகி இருந்தார் அப்போது. அமர்ந்து கொண்டார். Vote of thanks சொல்லி ஒருவர் முடித்து வைத்தார். மணி நடுநிசி 12.00 ஆகி இருந்தது(கோவில் இவ்வளவு நேரம் திறந்திருக்கலாமா?).

போகலாம் bus இருக்காது இதுக்குப் பிறகு, என வெளிய வந்து விட்டோம். shoe போடும் பொது தலைமை பக்தை ஒருவரிடம் மாட்டிக் கொண்டோம். ‘எங்க போறீங்க.. சாமிய தரிசனம் பண்ணிட்டு போங்க’ என கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக உள்ளெ இழுத்துச் சென்றார். அதற்குள் சாமியாரைப் பார்க்க பெரிய வரிசை காத்திருந்தது. எங்களைக் கூட்டி வந்தவர் முக்கியமானவர் போல. நேரே சாமியாரின் secretary போன்ற ஒருவரிடம் சென்று ஏதோ சொன்னார்; உடனே நாங்கள் அந்தப் பெரிய வரிசையின் முதலில் நிறுத்தப் பட்டோம். எனக்கு என்ன நடக்கும் எனத் தெரியாது. ரெண்டாவது ஆளாய் நின்று கொண்டிருந்தேன். என்னவந்தாலும் பாத்துக்கலாம் என்ற திமிர் தான் நிக்க வைத்தது. ஆனால் என் முன்னாள் நின்றிருந்த நண்பர்  படக்கென்று சாமியார் காலில் விழுந்து விட்டார். தாய் தகப்பன் காலிலேயே விழாத எனக்கு; சுயமரியாதை மட்டுமே என் தகப்பனார் விட்டுச்சென்ற சொத்து என மெதப்பொடு சுத்திக்கொண்டிருந்த நான், நண்பர் சாமியார் காலில் விழுந்ததும் வெலவெலத்துப் போனேன். ‘நானும் விழுந்தே ஆக வேண்டுமோ?’ அந்த தலைமை பக்தை எங்களுக்கு ஆசி வாங்கிக் கொடுக்கும் மும்முரத்தில், நான் காலில் விழ மறுத்தால் கழுத்தைப் பிடித்து விழ வைப்பர் போல் இருந்தது. பின்னே நிற்கும் பெரும் கூட்டம் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தது.

நண்பர் காதில் சாமியார் ஏதோ முணுமுணுக்க நண்பர் ஆதவன் கண்ட தாமரையாய் மலர்ந்தார். அடுத்து நான். ‘போச்சி, இன்னைக்கு பஞ்சயாத் ஆகாம போகாது’ ன்னு நினைக்கும் போதே நண்பர் எழுந்த செல்லவும், சாமியார் திரும்பி யாருடனோ பேசவும் சரியாய் இருந்தது. கன நொடி தான்; என்ன நினைத்தேனோ வேகமாய் நண்பரோடு நானும் வரிசையை விட்டு விலகிச் சென்றேன். நின்னைத்தது போல சாமியாரின் அடிபொடிகள் ‘எங்க போறீங்க? சாமிட ஆசிர்வாதம் வாங்கிட்டு போங்க என்று மூன்று பேர் பிடித்துத் தள்ள, நான் மீண்டும் வரிசையில் !!!!

சாமியார் என்னை நோக்கித் திரும்பினார். பின்னால் நின்றவர்கள் என்னை சாமியார் அருகில் தள்ளிச் சென்றனர். நான் சாமியாரைப் பார்க்க, அவர் என்னை பார்க்க; நான் படித்த பகுத்தறிவு, அறிவியல், மானுடவியல், உளவியல் புத்தகங்கள் கண் முன்னே வந்து சென்றன. பெரியார், Richard Dawkins, Sam Harris நமட்டுச் சிரிப்பு சிரிப்பது போல் சத்தம் காதுகளில். நான் தர்க்கம் செய்த இறையடியார்கள் சத்தமாகவே சிரித்தனர்.

சாமியார் முன் நிமிர்ந்தே நின்றேன். கையில் ஒரு ரோஜா பூ மற்றும் எலுமிச்சையை திணித்து கையைப் பிடித்து இழுத்து என் காதுகளில் ஏதோ சொன்னார்- ‘பழனி மழைக்கு வா உனக்கு நல்லதே நடக்கும்’. நான் சிரித்துவிட்டு நிமிர்ந்து நடந்து சென்றேன். மனதில் பெரும் மகிழ்ச்சி. மானம் போகமா இருந்ததை எண்ணி.

2  அடிஎடுத்து வைக்க வில்லை, ஒரு உண்டியல், ஒரு குங்குமம் வய்த்த ஒரு ஆசாமி. ‘சுவாமி மட்ல ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைக்கிறோம். உங்களால் முடிந்த உதவி பண்ணுங்க’. நான் கொடுக்க வில்லை. இன்னுமொரு 2 அடி. சாமியார் மடத்தின் Mini Store திறக்கப்பட்டிருந்தது. சாமியார் படம் போடப்பட்ட அனைத்தும் அங்கே விற்பனைக்கு இருந்தன. நான் வாங்கவில்லை எதையும். அடுத்த 2 அடி, கோவில் பூசாரி கையில் தட்டுடன் நின்று கொண்டிருந்தார். இவை அனைத்தும் கடுந்து நண்பரைத் தேடினால், அவரோ இன்னும் முதல் உண்டியலிலேயே நின்று கொண்டிருந்தார். நன்கொடை கொடுத்ததாகப் பிறகு சொன்னார்.

எங்கள் நண்பர்கள் நால்வர் இந்த ‘தரிசனம்-நன்கொடை’ routine முடித்து வெளியே வர 10 நிமிடம் ஆகியது. பின்னர் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். ஒரு பணக்கார இலங்கைத் தமிழர் எங்களை வீட்டில் drop செய்யக் காத்திருந்தார்(தலைமை பக்தையின் அன்பு). அலுங்காமல் இரவு 1.30 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.


இதைப் போன்ற சாமியார்களை நான் இந்தியாவில் நெருங்கக் கூட முடியாது. பெரிய பணம் கொடுக்க வேண்டும், இல்லை பலியாய் காத்துக் கிடைக்க வேண்டும். ரெண்டுமே கொடுமை. இல்லை மிகவும் முக்கிய/முக்காத பிரபலமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே நான் இரண்டாம் ஆளாக வரிசையில் நிற்க முடியும், என்னை வீடு கொண்டு சேர்க்க சொகுசுக் கார், அருமையான உணவு. இது என் சுமாரான முகம் பார்த்தல்ல, swiss franc பார்த்து. இந்த சாமியார்கள் spiritual tour செய்கின்றனர். வருடம் ஒருமுறை ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று. இந்த சாமியாரின் மடம் கேரளாவில் உள்ளது.இவர் ஐரோப்பா tourஇல் இருந்தார் அந்த சமயத்தில். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சுவிற்சர்லாந்து இவை நாளும் அவர் இணைய calendar இல் இருந்தன.

ஒரு நாட்டில் 50 ஹிந்துக் குடும்பங்கள் என வைத்துக் கொண்டாலும், ஒரு குடும்பம் 100 Euro நன்கொடை + விற்பனை செய்தாலும் 5000. 4 நாடுகள் என்றால் 20,000 euros. அதாவது 14 லட்சம் இந்திய ரூபாயில். ஒரு tour 14 லட்சம் என்றால் 3 tour 42 லட்சம் – வெறும் 15-20 நாட்களில். இவை வெறும் குறைவான மதிப்பீடே. வருமான வரியில் இந்தப் பணம் வராது. ‘சாமி கண்ணைக் குத்தும்’ என்று யாரும் கணக்கும் கேட்க மாட்டர்.

இது போன்ற famous ஆகாத சாமியார்களை அறிமுகம் செய்யும் மனிதர்களைக் கவனித்தால் ஒன்று புரியும். ஒரு புதிய சோப்பை சந்தையில் விற்கும் தொனியை அவர்களால் தவிர்க்க முடியாது. போதா குறைக்கு அந்த சாமியாரே அவரைப் பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டிராத புதிய பட்டங்களை/ அவதாரங்களைத் தருவார் அந்த அன்பர்.

இந்தக் கூட்டங்களை அமைத்துத் தரும் பக்தர்களுக்கு, இது ஒரு பரமானந்தம். தமிழகத்தில் நீங்கள் அடிக்கடிப் பார்க்கும் கிறிஸ்துவ இறையடியார்கள் போலவே, உலகம் முழுக்க ஹிந்து இறையடியார்கள், கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில், தேனொழுகப் பேசுவர்; கையை பிடித்து வம்படியாக அனைத்திற்கும் அழைப்பர். நாம் மலைக்கும் அளவிற்கு நமக்கு சகாயம் செய்வர்.

இந்தச் சாமியாரின் வரலாறு மிகக் comedy ஆனது. இவருக்கு இப்பொழுது வயது வெறும் 37 மட்டுமே. கேரளத்தில் பிறந்த இவர், பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு திருச்சி வந்து ஒரு விடுதியில் waterboy ஆகா பணிபுரிந்துள்ளார். பின்னாட்களில், அந்த விடுதி உரிமையாளரின் மனைவியின் துணையுடன் பல பூஜை/புனஸ்காரம் எனச் செய்து famous ஆகிறார். அப்பொழுது கிடைத்த முக்கிய contacts காரணமாக பணமும் பேரும் கிடைக்கிறது. சின்ன ஆசிரமம் அமைக்கிறார் கேரளத்தில். கேரளா சாமியார் + தமிழ் கடவுள் முருக அவதாரம், என இரு மாநிலத்து ஆட்களும் தேடி வரத் தொடங்க; ஆசிரமம் பெரிதாகிறது. உலகம் முழுக்க தரிசனம் பெற பக்த கொடிகள் தவமிருந்து அழைக்கின்றனர். லட்சங்களிருந்து கோடிகளில் புழங்கத் தொடங்குகிறார். பள்ளி, குழந்தைகள் ஆதரவு, முதியோர் ஆதரவு என நன்கொடைகள் கொட்டுகின்றன. இன்று இந்திய சாமியார்களின் இரண்டாம் அல்லது மூன்றாம் வரிசையில் உள்ளார். விரைவில் முதல் வரிசையில் வர வாய்ப்புள்ளது.

இம்மாதிரியான சாமியார்களின் சொத்து மதிப்பு எப்போதுமே underestimate செய்யப்படுகிறது. சாய் பாபா இறந்த பின் அவர் அந்தரங்க locker room இல் இருந்து எடுக்கப்பட்ட தங்கமும் வைரமும் அதற்க்கு உதாரணம். இவர்கள் வருமான வரியில் சிக்கவே மாட்டர் . இவர்களை கேள்வி கேட்கும் அதிகாரிகள் விலைக்கு வாங்கப்படுவர்; அரசியல்வாதிகள் விலை பேசப்படுவர். மக்கள் முழுமையாக நம்புவர்; எதிர்ப்பவர்கள் சாத்தான்களாகப்படுவர். ஆக, இவர்களுக்கு எதிரிகள் இன்னொரு சாமியாரக இருக்க முடியும் அல்லது இவர்கள் நெருங்கிப் பழகும் அரசியல்வாதிகளின் எதிரிகளாய் மட்டுமே இருக்க முடியும். மற்றவர் இவர்களது அறையில் camera வைத்து CD வெளியிட்டாலே ஒழிய; ஒன்றும் செய்ய முடியாது.

கருணை மற்றும் பயம்; இவை இரண்டுமே இந்த ‘வியாபாரத்தில்’ பெரிய மூலதனம். அதை அறுவடை செய்ய இந்த வித்தகர்கள் நன்கு பழகி இருப்பர். “ஒரு விஷயம் நம்புற மாதிரி சொல்லனும்னா உண்மையும் பொய்யும் கலந்து இருக்கனும்” என்ற ‘சதுரங்க வேட்டை’ வசனத்திற்கிணங்க இவர்கள் சொல்வதில் உண்மையும் இருக்கும் பொய்யுமிருக்கும். எதை எடுக்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், என்பது அவரவர் திறமை சார்ந்தது.

ஆனால் இங்கே  God – sells all the time,  என்பதில் ஐயமில்லை.

Leave a comment